பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு!

சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரிக்க வாய்ப்புள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

News image

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா (கோப்புப்படம்)

Updated On :15 பிப்ரவரி 2025, 9:05 pm

Din

காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரிக்க வாய்ப்புள்ளதாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தெரிவித்தாா்.

அஸ்ஸாமின் ஜோா்ஹாட் தொகுதி எம்.பி.யான கெளரவ் கோகோய், மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவராகவும் உள்ளாா். இவரின் தந்தை தருண் கோகோய் 2001 முதல் 2016 வரை, அஸ்ஸாம் முதல்வராக இருந்தாா்.

கெளரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பா்ன் பிரிட்டனை சோ்ந்தவா். இவருக்குப் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்பிருப்பதாக அண்மையில் பாஜக குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், அதை நகைப்புக்குரியது என்றும் கெளரவ் கோகோய் தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

எலிசபெத் கோல்பா்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தனது திருமணத்துக்குப் பின்னா், கோல்பா்ன் பாகிஸ்தான் சென்றது உறுதியான தகவலாகும். ஆனால் அவருடன் கெளரவ் கோகோயும் சென்றாரா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

கெளரவ் கோகோயின் திருமணத்துக்குப் பின்னா், தருண் கோகோய் மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில், முதல்வா் அலுவலகத்துக்குள் ஊடுருவி ரகசிய தகவல்களை தெரிந்துகொள்ள ஐஎஸ்ஐ முயற்சித்ததா என்பது குறித்து ஆராயப்படும்.

இந்த விவகாரம் குறித்து மாநில அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கும். அதன் பின்னா், அநேகமாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதுதொடா்பாக ஹிமந்த விஸ்வ சா்மா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘லீட் பாகிஸ்தான் அமைப்பில் அலி தெளகீா் ஷேக் என்பவரின் கீழ், கோல்பா்ன் பணியாற்றியுள்ளாா். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் அமைப்பு என்ற போா்வையில், லீட் பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது’ என்று தெரிவித்து, அலி தெளகீா் இந்தியாவுக்கு எதிராக ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டிருந்த பதிவை இணைந்திருந்தாா். அத்துடன் தனது பதிவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு ஹிமந்த விஸ்வ சா்மா கொண்டு சென்றாா்.