இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

திருவிழாவில் தலித் மக்களின் பங்களிப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

குஜராத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தலித் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் குறித்து...

கோப்புப் படம்

Published On :

குஜராத்தில் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அதிகாரிகளுக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தின் கல்யாண்புரா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் பிப்ரவரி 8 முதல் 10 வரை பிராண பிரதிஷ்டை மஹோத்சவம் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் தலித் சமூக மக்களின் பங்களிப்புகள் நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

கடந்த ஜனவரி 16 அன்று காந்திநகரைச் சேர்ந்த இந்திரஜித் சிங் சோதா என்பவர் தலித் மக்களின் பங்களிப்பு நிராகரைக்கப்படுவதைக் கண்டறிந்தபோது இந்தப் பிரச்சினை முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், ஹிந்து விழிப்புணர்வு அமைப்புகள் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை.

ஜனவரி 25 அன்று இந்திரவதன் பரோட், சங்கர்பாய் படேல் ஆகியோர் கல்யாண்புரா கிராமத்திற்குச் சென்று கோயிலின் தலைமை நிர்வாகி பாலபாய் தயாவைச் சந்தித்து ​​இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். அவர் கோயில் குழுவுடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்தார்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. பிப். 1 அன்று ஹிந்து அமைப்பு ஒன்றின் தலைவரான ரகுவீர் சிங் ஜடேஜா மற்றும் பட்டியல் சமூகத்தின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், கோவில் நிர்வாகம் இதுகுறித்து பதிலளிக்கவில்லை.

மேலும், இந்தப் பிரச்னையைத் தீர்க்க எழுத்துப்பூர்வ தீர்மானம் கொண்டுவர ஹிந்து அமைப்புகள் முன்வந்த நிலையில் அங்குள்ள தாசில்தார் ஒப்புதல் தர மறுத்தார்.

திருவிழாவில் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

கடந்த பிப். 9 அன்று இந்த விவகாரம் குறித்து இந்திரவதன் பாரோட் என்பவர் குஜராத் முதல்வர் உள்பட பல அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிய நிலையில் இந்தப் பிரச்னையின் தீவிரம் அதிகமானது.

இதனைத் தொடர்ந்து, பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இந்த விவகாரம் குறித்து 3 நாள்களுக்குள் உடனடியாக விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.