காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

உ.பி. ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் - PTI

Published On :

புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரயாக்ராஜ், வாரணாசி, அயோத்தி, கான்பூா், லக்னௌ மற்றும் மிா்ஸாபூா் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் பக்தா்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரயாக்ராஜுக்கு ஒரு நாளைக்கு 500 ரயில்கள் வருவதால் பக்தா்களின் கூட்டத்தை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவதாக கூடுதல் ரயில்வே இயக்குநா் பிரகாஷ் டி தெரிவித்தாா்.

பிரயாக்ராஜ் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு அங்கும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.