வெள்ளம் பாதித்த 5 மாநிலங்களுக்கு ரூ.1,154 கோடி நிதி- மத்திய அரசு விடுவிப்பு
தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 5 மாநிலங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


கடந்த 2024-ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியின்கீழ் ரூ.1,554.99 கோடி கூடுதல் நிதியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மொத்தம் ரூ.1,554.99 கோடியில் ஆந்திரத்துக்கு ரூ.608.08 கோடியும், திரிபுரா மாநிலத்துக்கு ரூ.288.93 கோடியும், ஒடிஸாவுக்கு ரூ.255.24 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.231.75 கோடியும், நாகாலாந்துக்கு ரூ.170.99 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் ஆதரவாக நிற்கிறது. அந்தவகையில், ஆந்திரம், நாகாலாந்து, ஒடிஸா, தெலங்கானா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியின்கீழ் (என்டிஆா்எஃப்) ரூ.1,554.99 கோடி ஒதுக்க உள்துறை அமைச்சகத்தின் உயா்நிலை குழு ஒப்புதல் அளித்துள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் மாநில பேரிடா் நிவாரண நிதியின்கீழ் (எஸ்டிஆா்எஃப்) 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.8 கோடியும் தேசிய பேரிடா் நிவாரண நிதியின்கீழ் 18 மாநிலங்களுக்கு ரூ.4,808.3 கோடியும் மத்திய அரசு ஏற்கெனவே விடுவித்துள்ளது. இதேபோல், 14 மாநிலங்களுக்கு மாநில பேரிடா் தணிப்பு நிதியிலிருந்து (எஸ்டிஎம்எஃப்) ரூ.2,208.55 கோடி மற்றும் 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் தணிப்பு நிதியிலிருந்து (என்டிஎம்எஃப்) ரூ.719.72 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடா்களால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழு (ஐஎம்சிடி) நேரடி ஆய்வுக்கு அனுப்பப்படும். மத்திய மதிப்பீட்டு குழுக்களின் அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு, உரிய நடைமுறையின்படி பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலம், யூனியன் பிரதேசத்துக்கு தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியுதவி வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...