இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது.
காலை 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 290.97 புள்ளிகளும் நிஃப்டி 91.70 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் தொடங்கியது. சுகாதாரம் மற்றும் பார்மா துறை பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
காலை 11 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 88.99 புள்ளிகள் உயர்ந்து 76,051.62 புள்ளிகளாக வணிகம் நடைபெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.11 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9.95 புள்ளிகள் உயர்ந்து 22,955.25 புள்ளிகளாக வணிகம் நடைபெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.034 சதவீதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 17 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் உள்ளன. எஞ்சிய 13 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
இதில் அதிகபட்சமாக சொமாட்டோ நிறுவனப் பங்குகள் 4% வரை உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக எல்&டி, கோட்டாக் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கச்சா எண்ணெய் விலை எதிரொலி: சென்செக்ஸ் 1,352.74 புள்ளிகள், நிஃப்டி 422.40 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

நிலையற்ற வர்த்தகத்திற்குப் பிறகு, ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

உயர்வுடன் தொடங்கி... சில நிமிடங்களில் சரிந்த பங்குச் சந்தை!
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

