கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

கங்கை நீர் எப்படிப்பட்டது என்பது குறித்து விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்டது உ.பி. அரசு
மகா கும்பமேளா
மகா கும்பமேளா
Published on
Updated on
1 min read

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திரிவேணி சங்கம நீர் குளிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுப்பது போல, உத்தரப்பிரதேச அரசு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதாவது, அந்த ஆய்வின் முக்கியம்சம் என்னவென்றால், விஞ்ஞானி, தனது ஆய்வகத்தில் பல்வேறு இடங்களில் கங்கை நீரின் மாதிரிகள் கொண்டு வரப்பட்டு, நுண்ணோக்கி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன, அந்த ஆய்வின்படி, ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்த போதிலும், கங்கை நீரில் பாக்டீரியா வளர்ச்சியோ, நீரின் தூய்மை அளவோ குறைந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

மகா கும்பமேளா
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்றிணையும் இடத்தில், மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜனவரி 13ஆம் தேதி முதல் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 58 கோடியை தொட்டுவிட்ட நிலையில், நாள்தோறும் அந்த நீரை ஆய்வுக்கு உள்படுத்தி வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கடந்த சில நாள்களுக்கு முன்பு, திரிவேணி சங்கம நீர் குளிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டது என்றும், மனிதக் கழிவுகளில் காணப்படும் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகியிருப்பதாகவும் எச்சரித்திருந்தது.

ஆனால், அப்படியெல்லாம் இல்லை, கங்கை நீரைக் குடிக்கலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், ஒரு விஞ்ஞானியின் பெயரை மேற்கோள்காட்டி உ.பி. அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில், நதி நீர் தூய்மையான "புனித நீரைப் போல" இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தூய்மை குறித்து சந்தேகத்தை எழுப்பிய மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளுக்கு எதிராக இந்த ஆய்வு முடிவு அமைந்துள்ளது.

அதாவது, பத்ம ஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் சோங்கர் என்பவர்தான், கங்கையின் ஐந்து இடங்களிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வு செய்திருக்கிறார்.

அதில் ஒரு பாக்டீரியாவும் இல்லை என்றும், அதனை ஒரு சில நாள்கள் எடுத்து வைத்திருந்த பிறகும் ஆய்வு செய்து பார்த்ததாகவும், அப்போதும் அதில் பாக்டீரியா வளரவில்லை என்றும் கூறியிருந்ததை உ.பி. அரசு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. அதாவது, 58 கோடி பக்தர்கள் நீராடிய பிறகும் கூட, கங்கை நீர், தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் அதி அற்புத சக்தி கொண்டிருப்பதாகவும் அறிக்கை நிறைவு செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com