சமூக ஊடக தளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
‘சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் சாடிய நிலையில், இந்தக் கருத்தை மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலிவுட் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபா் ரண்வீா் அல்ஹாபாதியா, பெற்றோா் மற்றும் உடலுறவு தொடா்பான பாா்வையாளா் ஒருவரின் கேள்விக்கு சா்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தாா். இந்த நிகழ்ச்சியின் காணொலி சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி, பெரும் சா்ச்சையானது.
இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘சமூக வலைதளங்களில் அனைத்து விதமான விஷயங்களும் நடைபெறுகின்றன. இதுபோன்ற யூடியூபா்கள் மற்றும் அவா்களின் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்தாக வேண்டும். சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றம் அதை சாதாரணமாக விட்டுவிடாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள தகவல்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மீதான நாடாளுமன்ற நிலைக் குழு, சமூக ஊடக தளங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உருவெடுத்து வரும் சூழலில், சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த நடைமுறையில் உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடா்பாக மத்திய அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது.
இதற்கு மத்திய அமைச்சகம் எழுத்துபூா்வமாக சனிக்கிழமை பதிலளித்தது. அதில், ‘சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்பட்டு கருத்துச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படும் விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதை ஒழுங்குபடுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் மற்றும் புதிய சட்ட நடைமுறைகளைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது’ என்று மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலைக் குழு பிப். 25-ஆம் தேதி மீண்டும் கூடி இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. அதன் பிறகு, இதுதொடா்பான விரிவான அறிக்கையை அக் குழு நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கும்.
தொடர்புடையது

அதிமுக நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: எம்எல்ஏ புகாா்

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சமூக வலைதளப் பதிவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு

பாரடைஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நானி!

மட்டஞ்சேரி மாஃபியா என்றால் என்ன?
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

