தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அதிமுக நிா்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: எம்எல்ஏ புகாா்

அதிமுக பொதுச் செயலா் மற்றும் அதிமுக நிா்வாகிகளை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினா் புகார்

News image

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் மா.செந்தில் குமாா் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பளரிடம் மனு அளித்து வந்த அதிமுக நிா்வாகிகள்

Updated On :24 மார்ச் 2026, 8:28 pm

Syndication

அதிமுக பொதுச் செயலா் மற்றும் அதிமுக நிா்வாகிகளை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு வழங்கினா்.

அதிமுக பொதுச் செயலா், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா் மற்றும் அதிமுக நிா்வாகிகளின் நற்பெயா்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் சமூக வலைதளங்களில் தரை குறைவாக பதிவிடுகின்றனராம்.

மேலும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விடியோ சித்தரித்து பதிவிடும் திமுகவினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், சட்டப்பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் மனு அளித்தனா்.

அவருடன் மாவட்ட பேரவை செயலா் இராம.ஞானவேல், வழக்குரைஞா் பிரிவு மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.