காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கொல்கத்தாவில் 3 பெண்கள் மரணம்: உயிர் பிழைத்த சகோதரர்களை விசாரிக்க முடிவு!

கொல்கத்தாவில் 3 பெண்கள் மரணம் அடைந்த சம்பவத்தில் 2 சகோதரர்களை விசாரிக்க முடிவு!

News image
கோப்புப்படம்
Updated On :24 பிப்ரவரி 2025, 8:41 am

DIN

கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல அதன் பின்னணியில் கொலை, தற்கொலை முயற்சி இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கும் நிலையில், அவர்களது குடும்பத்தினர் மரணம் தொடர்பாகவும் சந்தேகம் நிலவுகிறது.

தங்கரா பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் வீட்டில் இறந்துகிடக்க, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், இஎம் பைபாஸ் சாலையில் கார் மோதிய சம்பவத்தில் காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் முதற்கட்ட விசாரணையில், அது விபத்து அல்ல தற்கொலை முயற்சி என்று தெரிய வந்துள்ளது. இது காவல்துறைக்கு மிக சவாலான வழக்காக மாறியது.

இந்த சம்பவத்தில், மரணமடைந்த மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டதாக, தொழிலதிபர் கூறுவதில் காவல்துறைக்கு சந்தேகம் உள்ளது.

தொடர் சம்பவம் கடந்த புதன்கிழமை காலை 3.35 மணிக்குத் தொடங்கிது. அதாவது சகோதரர்களான பிரணாய் மற்றும் பிரசன் இருவரும் தொழிலதிபர்கள். இவர்களுடன் பிரணாய் மகன் பிரதீப் (14) சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மூவரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போதுதான் பிரணாய் தங்களது குடும்பத்தினர், தங்கராவில் உள்ள வீட்டில் சடலமாக இருப்பதாகக் கூறுகிறார்.

உடனடியாக காவல்துறை அவர்களது வீட்டிற்கு விரைகிறது. அங்கே மூன்று பெண்கள் சடலமாக இருக்கிறார்கள். வீடு முழுக்க ரத்தக் கறை. உடல் கூறாய்வில், பிரணாய் மனைவி சுதேஷ்னா, பிரசன் மனைவி ரோமி இருவரும் கழுத்தறுத்தும், பிரசன் மகள் பிரயம்வதா (14) விஷம் குடித்திருப்பதும் தெரிய வந்தது.

பிறகு பிரணாயிடம் நடத்திய விசாரணையில், குடும்பத்தினர் ஆறு பேரும் விஷம் சாப்பிட்டு சாக முடிவெடுத்தோம். ஆனால், ஒரு சிலர் கையில் நரம்பை அறுத்து இறக்க முடிவெடுத்தனர். அதுபோலவே நாங்களும் காரை வேகமாக இயக்கி விபத்தில் சாக நினைத்தோம் என்று கூறுயிருக்கிறார்.

இதற்குப் பின்னணியில், அவர்கள் செய்துவந்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதே காரணம் என்று அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக அவர்களது நிறுவனம் மற்றும் வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில் சம்பவத்துக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு, இவர்களை அடையாளம் தெரியாத பலர் சந்தித்ததாகவும், அவர்கள் ஒருவேளை கடன்காரர்களாக இருக்கலாம் என்றும் கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் கூறுகிறார்கள்.

இதில், கொலை மற்றும் தற்கொலைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சம்பவம் நடந்த போது பிரணாய் நிதானமில்லாமல் வீட்டிலிருந்து வெளியேறுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. எனவே அவர்தான் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகி, பெண்களை கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. பிரணாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரசன் தேய் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு சகோதரர்களிடமும் விசாரணை நடத்தலாம் என மருத்துவர்கள் அனுமதி வழங்கியதும், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும், சம்பவம் நடந்ததை மீண்டும் நடித்துக் காட்டவும் திட்டமிட்டுள்ளது.

மிகப் பணக்கார குடும்பமாக இருந்த பிரணாய் - பிரசன் குடும்பம், ஏராளமான கார்களுடன், நான்கு மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்ததாகவும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் இந்த துயர சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரசன் மற்றும் பிரணாய் சேர்ந்து பெண்களைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம், விஷம் குடித்து இறந்த பிரயம்வதாவின் முகத்தில் காயங்கள் இருப்பதால், அவர் வற்புறுத்தி விஷம் குடிக்கவைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.