கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!
கொல்கத்தாவில் 3 பெண்கள் மரணமடைந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சிறுவன் வாக்குமூலம்!


கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
14 வயது பிரதீப் தேய், விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நிலையி, பிப்ரவரி 19ஆம் தேதி நடந்தது என்ன என்பது பற்றி காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.
தனது தாய் சுதேஷ்னா, உறவினர் ரோமி இருவரும் கடைசி நேரத்தில் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். ஆனால், அவர்களை எனது தந்தை பிரணாய், உறவினர் பிரசன் இருவரும் விடவில்லை. அவர்களது நரம்புகளை துண்டித்து கொலை செய்துவிட்டனர்.
என்னையும், தலையணையை அமுத்திக் கொல்லப் பார்த்தனர். நான், யோகா பயின்றிருந்ததால், மூச்சைக் அடக்கி செத்தது போல நடித்ததால் உயிர் பிழைத்தேன் என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம், மரணமடைந்த பெண்களே தற்கொலை செய்துகொண்டதாக, பிரணாய் மற்றும் பிரசன் சொன்னது பொய் என்ற தகவல் காவல்துறைக்குத் தெரிய வந்துள்ளது.
கொல்கத்தாவில் வேகமாகச் சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அது விபத்து அல்ல அதன் பின்னணியில் கொலை, தற்கொலை முயற்சி இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கும் நிலையில், அவர்களது குடும்பத்தினர் மரணம் தொடர்பாகவும் சந்தேகம் ஏற்பட்டிருந்த நிலையில், அது தற்கொலையல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்கரா பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் வீட்டில் இறந்துகிடக்க, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், இஎம் பைபாஸ் சாலையில் கார் மோதிய சம்பவத்தில் காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் முதற்கட்ட விசாரணையில், அது விபத்து அல்ல தற்கொலை முயற்சி என்று தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில், மரணமடைந்த மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டதாக, தொழிலதிபர் பிரணாய் கூறியிருந்தார்.
சகோதரர்களான பிரணாய் மற்றும் பிரசன் இருவரும் தொழிலதிபர்கள். இவர்களுடன் பிரணாய் மகன் பிரதீப் (14) சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மூவரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போதுதான் பிரணாய் தங்களது குடும்பத்தினர், தங்கராவில் உள்ள வீட்டில் சடலமாக இருப்பதாகக் கூறுகிறார்.
இந்த தகவலை அடுத்து, காவல்துறை அவர்களது வீட்டிற்கு விரைகிறது. அங்கே மூன்று பெண்கள் சடலமாக இருக்கிறார்கள். வீடு முழுக்க ரத்தக் கறை. உடல் கூறாய்வில், பிரணாய் மனைவி சுதேஷ்னா, பிரசன் மனைவி ரோமி இருவரும் கழுத்தறுத்தும், பிரசன் மகள் பிரயம்வதா (14) விஷம் குடித்திருப்பதும் தெரிய வந்தது.
பிறகு பிரணாயிடம் நடத்திய விசாரணையில், குடும்பத்தினர் ஆறு பேரும் விஷம் சாப்பிட்டு சாக முடிவெடுத்தோம். ஆனால், ஒரு சிலர் கையில் நரம்பை அறுத்து இறக்க முடிவெடுத்தனர். அதுபோலவே நாங்களும் காரை வேகமாக இயக்கி விபத்தில் சாக நினைத்தோம் என்று கூறுயிருக்கிறார்.
இதற்குப் பின்னணியில், அவர்கள் செய்துவந்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதே காரணம் என்று அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதில், கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகித்த நிலையில், அதனை சிறுவனும் உறுதி செய்திருக்கிறார்.
சம்பவம் நடந்த போது பிரணாய் நிதானமில்லாமல் வீட்டிலிருந்து வெளியேறுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது. எனவே அவர்தான் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகி, பெண்களை கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. பிரணாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்ததும், பிரசன் தேய் உள்ளிட்டோரிடம் காவல்துறை விசாரணையைத் தொடங்கும் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...