மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சசிகலாவுடன் கூட்டணியா? அமித் ஷாவுடன் ஆலோசித்தது என்ன? எடப்பாடி பழனிசாமி பதில்!

அமித் ஷாவுடன் ஆலோசித்தது என்ன? என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளதைப் பற்றி...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - படம்: எக்ஸ்!

Published On :

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஏன்? என்பது குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், புதுவரவான தவெகவும் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஆளும் கட்சியான திமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை எப்போதும் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதன் கூட்டணி கட்சிகளிடையே நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி நேற்று தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை தில்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழக தேர்தலில் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து அமித் ஷாவிடம் பேசினேன். சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து எதுவும் பேசவில்லை.

எங்களைப் பொறுத்தவரை மிக சுமுகமான, எழுச்சியான கூட்டணி அமைந்துள்ளது. தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினேன்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில்தான் குழப்பம் இருக்கிறது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? என்றே தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has explained why he met Union Home Minister Amit Shah in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.