மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

அதிகரிக்கும் போர்ப் பதற்றம்.. சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்!

சௌதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதைப் பற்றி...

A video going viral on social media shows black smoke rising from what is claimed to be the US embassy in Riyadh after an Iranian strike. The authenticity of the video has not been verified.

சௌதியில் ஈரானின் டிரோன் தாக்குதலில் பற்றி எரியும் அமெரிக்க தூதரகம். - படம்: எக்ஸ்

Published On :

சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ராணுவத்தினர் நடத்திய அதிரடி டிரோன் தாக்குதலில், தூதரகக் கட்டடம் மற்றும் அருகில் இருந்த கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன.

ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் சேர்த்து கடந்த சனிக்கிழமை நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

இந்தப் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், சௌதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தாக்குதல் நடத்தியதில் கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்தன.

மத்திய கிழக்கு நாடுகள் நான்கு நாள்களாக பற்றி எரிந்து வரும் நிலையில், இந்த டிரோன் தாக்குதலை சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சௌதி மத்திய அமைச்சகம வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க தூதரக வளாகத்தை இரண்டு டிரோன்கள் தாக்கின. இதன் விளைவாக தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.

Summary

Two Iranian drones struck the US Embassy in Riyadh, triggering a fire and some material damage, as the escalating US-Iran-Israel conflict entered its fourth day. US President Donald Trump warned that retaliation was imminent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.