லக்னௌவில் 5 பேர் கொலை: குற்றவாளி பதிவு செய்திருக்கும் விடியோ

லக்னௌவில் 5 பேர் கொலையில் குற்றவாளி பதிவு செய்திருக்கும் விடியோ வெளியானது.
லக்னௌவில் 5 பேர் கொலை: குற்றவாளி பதிவு செய்திருக்கும் விடியோ
Published on
Updated on
1 min read

லக்னௌவில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் நான்கு மகள்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலை செய்த அர்ஷத் பதிவு செய்திருந்த விடியோ வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில், விடுதி அறையில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 4 மகள்கள் கொலை செய்யப்பட்டனர்.

குடும்பத் தகராறில், தாய் மற்றும் 4 மகள்களைக் கொலை செய்ததாக 24 வயது இளைஞர் அர்ஷத் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் கொலை செய்தபோது, பதிவு செய்திருந்த விடியோவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதில், எங்களது இடம் அபரிக்கப்பட்டது, வீடு எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, 15 நாள்களாக நடுத்தெருவில்தான் இருந்தோம், உறங்கினோம், எங்கள் வீட்டு பெண்கள் விற்கப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டோம். எங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவே கொலை செய்தோம் என்று கூறி, இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் பெயர்களையும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார் அந்த விடியோவில்.

மேலும் தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்தபிறகு அவர்களது உடல்களையும் அர்ஷத் விடியோவில் இணைத்துள்ளார். இந்தக் கொலைகளுக்கு, தனது தந்தை உதவியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கொலை செய்துவிட்டு, விடியோவில் அவர் பேசுகையில், இந்த விடியோவை காவல்துறை பார்க்கும்போது தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

வீட்டை மீட்க நாங்கள் பலரது உதவியை நாடினோம். ஆனால் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காததால்தான் இந்த முடிவை எடுத்தோம் என்றும் கூறி எங்கள் உயிர்களுக்கு நீதி வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com