விமானப் படை மேற்கு மண்டல தளபதியாக ஜிதேந்திர மிஸ்ரா பொறுப்பேற்பு!

இந்திய விமானப்படை மேற்கு மண்டல தளபதியாக மிஸ்ரா பொறுப்பேற்பு
விமானப் படை மேற்கு மண்டல தளபதியாக ஜிதேந்திர மிஸ்ரா பொறுப்பேற்பு!
படம் | இந்திய விமானப் படை எக்ஸ் தளம்
Published on
Updated on
1 min read

புது தில்லி: விமானப் படை மார்ஷல் ஜிதேந்திரா மிஸ்ரா இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

முன்னதாக, இப்பதவியை வகித்து வந்த பங்கஜ் மோகன் சின்ஹா விமானப் படையில் தனது 39 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை(டிச. 31) ஓய்வு பெற்றார். இதையடுத்து, லடாக் மற்றும் அதையொட்டியுள்ள வட இந்தியாவின் சில பகுதிகளில் வான் வழிப் பாதுகாப்பை உறுதி செய்யும் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தளபதியாக ஜிதேந்திரா மிஸ்ரா புத்தாண்டு நாளான இன்று(ஜன. 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.

விமானப் படையில் 38 ஆண்டு கால அனுபவமிக்கவரான ஜிதேந்திரா மிஸ்ரா விமானப் படை விமானியாகவும், அதன் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஒத்திகைகளில் தலைமையேற்று நடத்தியுள்ளதுடன், விமானம் மற்றும் அதன் சோதனை அமைப்பில்(ஏஎஸ்டிஇ) தலைமை விமானியாகவும், விமானப்படை தலைமையகத்தில் உதவி தளபதியாகவும் (திட்டப் பணிகள்) உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். விமானப்படையில் இவரது சேவையைப் பாராட்டி உயர் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் உள்ள தேசிய பாதுகாப்புப் பயிற்சி மையம் மற்றும் விமானப் படை விமானிகள் பயிற்சி பள்ளி, அமெரிக்காவிலுள்ள விமான கட்டுப்பாட்டு மற்றும் விமானப் படை பணியாளர் கல்லூரி, பிரிட்டனிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான ராயல் கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com