பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மீட்பு!

ஆழ்துளைக் கிணற்றில் 10 நாள்களாக உயிருக்குப் போராடிய 3 வயது குழந்தை மீட்பு!

News image
Updated On :1 ஜனவரி 2025, 1:56 pm

DIN

ராஜஸ்தானின் கோட்புட்லி - பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் கடந்த டிச.23 அன்று விளையாடிக் கொண்டிருந்த சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை அங்கு தோண்டப்பட்டிருந்த 150 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

ஆரம்பத்தில் கயிற்றால் கட்டப்பட்ட இரும்பு வளையத்தைப் பயன்படுத்தி சிறுமியை மீட்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே சுமார் 150 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு குழந்தையை உயிருடன் மீட்க தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நிலத்துக்கு கீழே கடுமையான பாறைகள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் பாறைகளைத் துளைக்கும் சவாலான பணிகளை மேற்கொண்ட மீட்புப்படையினர் குழந்தையை மீட்கும் பணியில் இரவு பகல் பாராமல் கடந்த 10 நாள்களாக ஈடுபட்டிருந்தனர். ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் பணி 10-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது.

இந்த நிலையில், அந்த குழந்தை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து இன்று(ஜன. 1) மாலை வெளியே மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவுடன் குழந்தையை மருத்துவச் சிகிச்சைக்காக உடனடியாக அவசர ஊர்தியில் ஏற்றி மீட்புக்குழுவினர் அழைத்துச் சென்றுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.