பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸ் முதலில் ஹேம மாலினியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்: பாஜக வேட்பாளர் கருத்து!

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் செய்தியாளர்களிடம் பேசியவை...

News image
ரமேஷ் பிதுரி
Updated On :5 ஜனவரி 2025, 1:31 pm

DIN

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி அதற்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்றும் ஹேம மாலினியை விமர்சித்த லாலு பிரசாத் யாதவ் முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியை எதிர்த்து பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார்.

ரமேஷ் பிதுரி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று பேசுகையில், “பிகார் மாநில சாலைகளை ஹேம மாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று லாலு உறுதியளித்தார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்" எனப் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிண்டே பாஜகவை பெண்களுக்கு எதிரான கட்சி என்றும் ரமேஷ் பிதுரி கேவலமான புத்தியைக் கொண்டவர் என்றும் விமர்சித்திருந்தார்.

ரமேஷ் பிதுரி அவரது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கண்டனக் குரல்களை எழுப்பினர்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பதிலளித்த ரமேஷ் பிதுரி, “காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் அவர்களின் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவை ஹேம மாலினியிடம் முதலில் மன்னிப்புக் கேட்கச் சொல்லவேண்டும். பிரியங்கா காந்தி விஐபி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை இவ்வாறு நடத்துகின்றனர். சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்த ஹேமமாலினி மரியாதைக்கு குறைவானவர் அல்ல.

காங்கிரஸ் கட்சியினர் ஹேமமாலினிக்காக பேசமாட்டார்கள். அவர் சலுகைகள் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. வாக்குகளைப் பெறுவதற்கான நாடகத்தில் மட்டுமே அவர்கள் ஈடுபடுகின்றனர். நேரு குடும்பம் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை நாசமாக்கியுள்ளனர். இப்போது மக்கள் அவர்களின் தந்திரங்களை புரிந்துகொண்டனர்” எனக் கூறி காங்கிரஸ் கட்சியின் மன்னிப்புக் கோரிக்கையை நிராகரித்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அவரது இந்தக் கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான வாய்வழித் தாக்குதல்களைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.