காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன் என்று தில்லி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியை எதிர்த்து பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார்.
ரமேஷ் பிதுரி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று பேசுகையில், “பிகார் மாநில சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று லாலு உறுதியளித்தார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதிகலிலுள்ள சாலைகளை உருவாக்கியதைப் போன்று கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்" எனப் பேசியிருந்தார்.
பிரியங்கா காந்தி குறித்த அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தளப் பதிவில், “பிரியங்கா காந்திக்கு எதிரான ரமேஷ் பிதுரியின் கருத்து மிகவும் வெட்கக்கேடானது. இதுதான் பாஜகவின் உண்மை முகம். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுமற்றும் சிந்தனையின் தந்தையே பிரதமர் மோடிதான். அவரே, பெண்களுக்கு எதிராக 'மாங்கல்யம்' மற்றும் 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார். இந்த மோசமான பேச்சுக்காக ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்
ரமேஷ் பிதுரிக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “இந்த தவறான நடத்தை ரமேஷ் பிதுரி என்ற மலிவான மனிதனின் மனநிலையை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவருடைய உரிமையாளர்களின் யதார்த்தத்தை வெளிக்காட்டுகிறது. பாஜகவின் இத்தகைய கீழ்த்தரமான தலைவர்களின் மூலம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மதிப்பினை நீங்கள் கண்டுகொள்ளலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வயநாடு நிலச்சரிவு: நேரில் வராத ராகுல், பிரியங்கா! பாஜக கடும் விமா்சனம்!
உத்தரகண்டில் பிரியங்கா, ராபா்ட் வதேரா நில அபகரிப்பு முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

வாக்களிக்கும் உரிமையையும் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தால் என்ன? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

ஆர்எஸ்எஸ் பற்றி ஒரு தலித் நபருக்கு ஏன் கவலை? பிரியங்க் கார்கே குறித்து பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



