மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

பாஜக நிர்வாகியைப் பணயக் கைதியாக்கி பணம், நகை கொள்ளை! உ.பி.யில் பரபரப்பு!

உ.பி.யில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல் பற்றி...

Robbers

கொள்ளை - file photo

Published On :

உத்தரப் பிரதேசத்தில் ஓபிசி மோர்ச்சா நிர்வாகியான ரமேஷ் யாதவை, பணயக் கைதியாகப் பிடித்து, மர்ம நபர்கள் பணம், நகை கொள்ளையடித்துச் சென்றதாகக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

பாஜகவின் ஓபிசி மோர்ச்சா நிர்வாகியான ரமேஷ் யாதவை, முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் பணயக் கைதியாகப் பிடித்து வைத்து, அவரது பண்ணை வீட்டிலிருந்து ரூ. 15 லட்சம் ரொக்கம், இரண்டு தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் காவல் துறை அதிகாரி தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, நான்கு பாதுகாவலர்கள், நான்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள், ஓட்டுநர் உள்பட சுமார் 14 ஊழியர்கள் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளதாகக் காவல் ஆணையர் தெரிவித்தார்.

முகமூடி அணிந்த கொள்ளையர்கள், ரமேஷ் யாதவின் கை மற்றும் கால்களைக் கட்டிப்போட்டு, பணத்தையும் அவர் அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

பின்னர், பாஜக நிர்வாகி தன்னை விடுவித்துக்கொண்டு, இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் அங்குள்ளோருக்கு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் சந்தேக நபர்கள் தெளிவாகத் தெரியவில்லை. பண்ணை வீட்டைச் சுற்றிலும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை ஆராய்ந்து, போலீசார் துப்பு துலக்கி வருகின்றது.

இவ்வழக்கை விசாரித்துத் தீர்வு காண, துணை காவல் ஆணையர் (தெற்கு) தீபேந்திர நாத் சௌத்ரி, கூடுதல் டிசிபி அரீபா நோமன, ஏசிபி கிருஷ்ணகாந்த் யாதவ் ஆகியோர் தலைமையில் சுமார் ஆறு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.