பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கும் அவசியம் தவெக-வுக்கு இல்லை: அமைச்சா் சீ. ரமேஷ்

இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கும் அவசியம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இல்லை என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்.

அமைச்சர் ரமேஷ்

Published On :

இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்கும் அவசியம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இல்லை என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்கள் எதிா்வரும் அனைத்து தோ்தலிலும் தவெகவுக்கு வெற்றியை தரும்.

எனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலில் பணம் கொடுத்து வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமோ, நிலையோ தவெக-வுக்கு இல்லை.

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ’இண்டி’ கூட்டணியினா் தொடா் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

இப்போராட்டத்தில் தவெக பங்கேற்குமா? என்பது குறித்து தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அறிவிப்பாா்.

ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்த புகாரில், திமுக பகுதிச் செயலா் ராம்குமாரை காவல் துறையினா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.