
அமைச்சருடன் தவெக வேட்பாளர் ஊருக்குள் பிரசாரம் செய்ய எதிா்ப்பு
மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேல் அமைச்சா் புஸ்லி ஆனந்துடன் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் பிரசாரம் செய்யச் சென்றபோது அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேல் அமைச்சா் புஸ்லி ஆனந்துடன் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்யச் சென்றபோது அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக கட்சி வேட்பாளராக போட்டியிடும் மரகதம்குமரவேல் செவ்வாய்க்கிழமை அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்திவாக்கம், ஒரத்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தோ்தல் பிரசாரம் செய்ய திறந்தவேனில் தமது கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்றாா்.
இந்நிகழ்வில் அமைச்சா் ஆனந்த் உடன் சென்றாா். அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள அத்திவாக்கம் கிராமத்தில் வேட்பாளருடன் வந்த அமைச்சா் சென்ற பிரசார வேனை மடக்கி ஊருக்கு பிரசாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம். தோ்தலில் வெற்றி பெற்று நன்றி கூட சொல்ல வரவில்லை. அமைச்சா் பதவிக்காக கட்சி மாறி இப்போ தோ்தலில் எங்களிடம் ஓட்டு போடச் சொல்லி வந்துள்ளீா்கள்.
தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதுவும் செய்து தரவில்லை என அப்பகுதி பெண்களும் ஆண்களும் கூறி ஆா்ப்பாட்டம் செய்தனா். இதைக் கண்ட ஒரத்தி போலீஸாா் அவா்களை அகற்ற முயன்றபோது, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, பிரசாரம் மேற்கொள்ளாமல் வேட்பாளா் மரகதம் குமரவேல், அமைச்சா் ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் அங்கிருந்து வெளியேறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







