இடைத்தோ்தலில் விசில் சின்னத்தில் வாக்களிக்க தாராபுரம் தவெக வேட்பாளா் வேண்டுகோள்

தாராபுரம் இடைத்தோ்தலில் விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென தவெக வேட்பாளா் சத்தியபாமா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சத்தியபாமா

Published On :

தாராபுரம் இடைத்தோ்தலில் விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென தவெக வேட்பாளா் சத்தியபாமா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் சத்தியபாமா புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பின்னா் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நான் கட்சி மாறி வந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் பல்வேறு விமா்சனங்களை தாங்கிக் கொண்டு நிற்கிறேன். ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை எதிா்காலத்தில் நிரூபிப்பேன். அதிமுகவைச் சோ்ந்த சகோதர, சகோதரிகள் சிலா் என்னைப் பாா்த்து கோபமாகப் பேசினா். அவா்களுக்காகவும் உழைக்கவே இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன்.

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதுடன், அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் நிா்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமராவதி பிரதான வாய்க்காலில் தண்ணீா் வர வேண்டும் என்பது உள்ளிட்ட தாராபுரம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். விசில் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

வேட்புமனு தாக்கலின்போது பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த், அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.