மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்வி

மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல் என பல விவகாரங்கள் குறித்து அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்வி

Electricity, Nirmal Kumar

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் - எக்ஸ்

Published On :

தமிழ்நாட்டில், தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது குறித்து மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.

திமுக ஆட்சிக் காலத்தில் சரியாக பணிகளை கையாளாததால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும், எல் நினோ காரணமாக வெய்யில் அதிகரித்திருப்பதால், தேசிய அளவில் கூட, முன்கூட்டியே மின் தேவை அதிகரிக்கும் என்பதை கணிக்கவில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமாரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலில், தமிழ்நாட்டுக்கு, மத்திய தொகுப்பிலிருந்து போதிய மின்சாரம் கிடைக்காததால் தனியாரிடமிருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மின் தேவை கூடுதலாக 30 சதவிகிதம் அதிகரித்துள்ளதால் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளோம். 3500 யூனிட்டுக்கு டெண்டர் விட்டாலும் 1500 யூனிட் மட்டுமே வாங்கவிருக்கிறோம். இது குறுகிய கால டெண்டர்தான். திமுக ஆட்சியில் நீண்ட கால செயல்திட்டங்கள் எதையும் செயல்படுத்தாததால் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக விலைக்கு வாங்கப்படும் மின்சாரம் மாலை 6 மணி முதல் 12 மணி வரை மிக முக்கிய தேவை நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றார்.

அண்டை மாநிலங்களை விட கூடுதல் விலைக்கு மினன்சாரம் வாங்குவது ஏன் என்ற கேள்விக்கு, அமைச்சர் அளித்த பதிலில், அண்டை மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் மின் தேவை அதிகமாக உள்ளது. காற்றாலை மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவில்லை. என்எல்சியில் இருந்து வர வேண்டிய 1800 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கவில்லை. வெய்யிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாடுக்கு மின் தேவை அதிகமாக உள்ளது. மின்சாரத்தை வாங்கவில்லை எனில் பவட் கட் அதிகம் நேரிடும். தமிழ்நாடு முழுவதும் 2 அல்லது 3 மணி நேரம் மின் வெட்டு ஏற்படும் என்றார்.

மேலும், 3500 மெகாவாட் மின்சாரத்துக்கு டெண்டர் வெளியிட்டாலும் 1500 மெகாவாட் மட்டுமே வாங்கப்படும். மின் தேவை அதிகரிப்பு காரணமாக குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. மின்சார கொள்முதலில் எந்த குறைபாடோ தவறோ முறைகேடோ நடக்கவில்லை. மின் தேவை அதிகரித்துள்ளதால் மட்டுமே மின் தடையை தவிர்க்கவே கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் நீண்ட கால ஒப்பந்தங்கள் மற்கொள்ளப்படும்.

தற்போது பெறப்படும் மின்சாரம் அக். 15 முதல் 31 வரையிலான காலக்கட்டத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

ஒரு யூனிட் ரூ.35க்கு வாங்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.5 கோடி செலவு ஆகிறது. திமுக ஆட்சியில் நீண்ட கால ஒப்பந்தம் போடப்பவில்லை.

அசாமிலிருந்து 430 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்து விட்டோம். திமுக ஆட்சியில் 4 முறை மின்துறை அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தன் மீதான வழக்குகளில்தான் கவனம் செலுத்தினார், தன் துறை மீது கவனம் செலுத்தவில்லை.

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 50 சதவிகிதம் இருந்தது தற்போது 75 சதவிகிதமாக மாற்றியிருக்கிறோம். திமுக ஆட்சியில் லெட்டர் பேடு இல்லாத நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.