26வது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதி தற்கொலை! அதுவும்..

26வது திருமண நாளைக் கொண்டாடிவிட்டு தற்கொலை செய்த தம்பதி பற்றி
திருமண நாள்
திருமண நாள்Center-Center-Chennai
Published on
Updated on
1 min read

நாக்பூர்: தங்களது 26வது திருமண நாளை வெகு விமரிசையாக, நள்ளிரவு வரை கொண்டாடிய தம்பதி, அதிகாலை தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திங்கள்கிழமை இரவு உறவினர்கள், நண்பர்களுடன் நள்ளிரவு வரை மிக உற்சாகமாக சிரித்து, ஆடிப்பாடி தங்களது 26வது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதி இருவரும் செவ்வாய்க்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்துள்ளனர்.

57 வயது ஜெரில், சமையலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்தார். அவரது மனைவி அன்னே (46) படுக்கையறையில் பிணமாகக் கிடந்தார். அவர் தனது திருமணத்தின்போது அணிந்திருந்த அதே ஆடைணை அதாவது 26 ஆண்டுகளுக்கு முன் அணிந்திருந்த ஆடையை அணிந்திருந்தார். அவரது உடல் வெள்ளை நிற துணியால் நன்கு மூடப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதனைப் பார்க்கும்போது, முதலில் அன்னே தற்கொலை செய்துகொண்டிருப்பார். அவரது உடலை அலங்காரம் செய்துவிட்டு, ஜெரில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இவர்கள் வசித்து வந்த மர்ட்டின் நகர் பகுதி மக்கள், தற்கொலைச் செய்தி அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என்பதைத்தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இவர்கள் இரண்டு தற்கொலை கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஒரு உயிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். தற்கொலைக்கான காரணம் தெரியாமல் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்கொலைக்கு முன்பு, அன்னே ஒரு விடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், அனைவருக்கும் இறுதியாக வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும், எங்களது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்றும், தங்களது சொத்துகளை வீட்டின் பெரியவர்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார்.

இப்போது இவரை, அவர்களது உறவினர்களுக்கும் இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும், அவர்கள் திருமண நாள் கேக்கைக் கூட, நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெட்டியதாகவும் கூறுகிறார்கள்.

இருவரும் தங்களது கடைசி விருப்பமாக கைகளைக் கோர்த்தபடி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், ஒரே சவப்பெட்டி தயாரிக்கப்பட்டு, அதில் ஒன்றாக வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com