நவீன ஆந்திரத்தை உருவாக்குவதே நோக்கம்: பிரதமர் மோடி

நவீன ஆந்திரத்தை உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியேற்றுள்ளதாக கூறினார் பிரதமர்.
 பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி PTI
Published on
Updated on
2 min read

நவீன ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியேற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்திற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனக்காபள்ளி மாவட்டத்தில் ரூ. 6500 கோடி மதிப்பிலான என்டிபிசி-யின் பசுமை ஹைட்ரஜன் மையத் திட்டத்துக்கு இன்று (ஜன. 8) அடிக்கல் நாட்டினார்.

கிருஷ்ணப்பட்டணம் பகுதியில் 2500 ஏக்கர் பரப்பளவில், ரூ. 1,518 கோடி மதிப்பில் அமையவுள்ள தொழில் மையத்துக்கு கணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி
விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி

இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனப் பேரணியில் ஈடுபட்டார். விசாகப்பட்டினத்தில் உள்ள சம்பத் விநாயகர் கோயில் தொடங்கிய பேரணி ஆந்திரப் பல்கலைக் கழகம் வரை நடைபெற்றது.

பின்னர், ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.

PTI

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

''உலகில் அதிக அளவிலான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் திறனுடைய சில நகரங்களில் ஒன்றாக விசாகப்பட்டினமும் மாறும். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தின் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். ஆந்திரத்தில் வலுவான உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கு இது உதவும். நக்கப்பள்ளியில் மருந்து பூங்காவுக்கு அடிக்கல் நாட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற பூங்காக்கள் நிறுவப்பட்டிருக்கும் 3 மாநிலங்களில் ஆந்திரமும் ஒன்று.

வாய்ப்புகளை அனைவருக்குமானதாக மாற்றுவதே நமது அரசின் நோக்கம். புதிய நகரமயமாக்கலுக்கான உதாரணமாக ஆந்திரப் பிரதேசம் மாறிவருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணப்பட்டனத்தில் தொழிற்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

100% மின்மயமாக்கல் கொண்ட ரயில்வே துறையைக் கொண்ட மாநிலங்களில் ஆந்திரமும் ஒன்று. மத்திய அரசின் திட்டத்தின்கீழ் ஆந்திரத்தில் 70 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திர மக்களின் பயண வசதிக்காக 7 வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உள்கட்டமைப்பில் ஏற்படும் புரட்சி, நகரங்களுக்கு இடையேயான இணைப்பு, மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஆகியவை சிறந்த நிலப்பரப்பாக ஆந்திரத்தை மாற்றுகிறது. விசாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்கள் இந்திய வணிகத்தின் வாயில்களாக உள்ளன.

ஆந்திர மீனவ மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறோம். மீனவ மக்களுக்கு கிஷான் கிரெடிக் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | முட்டாள்தனமானப் பேச்சு: பாஜக வேட்பாளருக்கு பிரியங்கா கண்டனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com