திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!

திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் உத்தரவு.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் நலம் விசாரிக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் நலம் விசாரிக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுPTI
Published on
Updated on
1 min read

திருப்பதி கூட்ட நெரிசல் விவகாரத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட 2 பேரை இடைநீக்கம் செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை (ஜன. 10) வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சர்வதரிசன டிக்கெட் வாங்க திருப்பதியில் குவிந்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் நேற்று (ஜன. 8) உயிரிழந்தனர்.

மேலும், பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருப்பதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உலகப் புகழ் பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க | திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி: பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? - ரோஜா கேள்வி

டிக்கெட் விநியோகத்தில் தேவஸ்தானத்தின் முறையான திட்டமிடாத நிர்வாகக் குறைபாடே காரணம் என பலர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதற்கு முன்னதாக, விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் அதிகாரிகள் சரியாக நிலைமையைக் கையாளவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, துணை காவல் கண்காணிப்பாளர் உள்பட இரு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

திருப்பதி காவல் கண்காணிப்பாளர் எல்.சுப்பாராயுடு, இணை ஆணையர் கெளதமி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும், மோசமாகக் காயமடைந்தோருக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையும் படிக்க | அனைவருமே செத்துவிடுவோம் என நினைத்தேன்: திருப்பதியில் உயிர் பிழைத்தவர் தகவல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com