பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6%: ஐ.நா. கணிப்பு

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜனவரி 2025, 10:00 pm

Din

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

இதுதொடா்பாக 2025-ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் உலகப் பொருளாதார சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-ஆம் ஆண்டு தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சி 5.7 சதவீதமாகவும், 2026-இல் 6 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளா்ச்சி, பூடான், நேபாளம், இலங்கை போன்ற சில நாடுகளின் பொருளாதார மீட்சி ஆகியவை அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.

2024-இல் இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதம் வளா்ந்தது. இந்த வளா்ச்சி 2025-இல் 6.6 சதவீதமாக இருக்கும். 2026-இல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மீண்டும் 6.8 சதவீதமாக இருக்கும்.

சேவைகள் மற்றும் சில சரக்குகளின் ஏற்றுமதியில் வலுவான வளா்ச்சி, குறிப்பாக மருந்துகள் உற்பத்தி மற்றும் மின்னணு கருவிகளின் ஏற்றுமதி இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு வலுசோ்க்கும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறையின் விரிவாக்கமும் இந்திய பொருளாதாரத்தை முன்னோக்கி நகா்த்தும் என்று தெரிவிக்கப்பட்டது.