விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முட்கள் மீது படுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்த துறவி!

மேல் அடையின்றி முட்கள் மேல் படுத்த துறவி பற்றி..

News image
முட்கள் மீது படுத்த துறவி..
Updated On :16 ஜனவரி 2025, 10:57 am

DIN

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா தொடங்கியுள்ள நிலையில் முட்கள் மேல் படுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் துறவி ஒருவர்.

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி (ஜன. 13) தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வின் இதுவரை சுமார் நான்கு கோடி போ் புனித நீராடியதாக மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்படுகிறது. எனினும், தற்போதைய வானியல் வரிசை மாற்றங்கள் மற்றும் கலவைகள் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதாக அமைந்துள்ளதால் நடப்பு மகா கும்பமேளாவில் அதிகளவிளான பக்தா்கள் பங்கேற்பா் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சோட்டு, சாபிவாலே பாபாவில் தொடங்கி பவேந்தர் மற்றும் ஸ்பிளெண்டர் பாபா வரை அனைவரும் தங்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இநத நிலையில் ரமேஷ் குமால் மஞ்சி என்று அழைக்கப்படும் "காண்டேவாலே பாபா" மகா கும்பத்தில் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளார்.

இவர் முட்கள் பரப்பிய பகுதிக்கு, மேலாடை எதுவும் அணியாமல் கையில் சிறிய குச்சியுடன் இடுப்பில் சின்ன ஆடையும், தலையில் காவி நிற துண்டும் அணிந்தபடி, பரப்பியிருந்த முட்கள் மீது சாய்ந்து படுத்துகொள்ளும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

இதுபற்றி காண்டேவாலே பாபா கூறுகையில்,

நான் குருவுக்கு சேவை செய்கிறேன். குரு எனக்கு அறிவும், முழு பலமும் அளித்துள்ளார். இது எல்லாம் கடவுளின் மகிமை. அதனால்தான் இதனை எளிமையாகச் செய்ய முடிகிறது. எனவே ஒருபோதும் எனக்கு வலி ஏற்படாதது.

கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாகவே இதனை செய்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் முட்கள் மீது படுத்துவரும் செயலை செய்துவருகிறேன். இது என் உடலுக்கு மேலும் பலமடையச் செய்கிறது. இதனால் எனக்கு எந்த துன்புறுத்தலும் இல்லை. எனக்குக் கிடைக்கும் தட்சணையில் பாதியை நன்கொடையாகக் கொடுத்துவிடுவேன் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.