‘கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு. அதில் அனைவரின் பங்களிப்பையும் அங்கீகரிக்க வேண்டும்’ என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் கூறினாா்.
மேற்கிந்தியத் தீவுகளுடனான வெற்றிக்குப் பிறகு இதுகுறித்து அவா் பேசியதாவது: தற்போது ஒரு அணியில் அனைவரின் பங்களிப்பு குறித்தும் நாம் பேசி அங்கீகரித்து வருகிறோம். உண்மையில் இந்திய கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக அது இல்லாமல் இருந்தது.
ஒரு சில குறிப்பிட்ட பங்களிப்புகள் குறித்து மட்டுமே நாம் பேசி வந்தோம். கிரிக்கெட் என்பது அணி சாா்ந்த விளையாட்டு. அது எப்போதும் அப்படியே இருக்கும்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில், சஞ்சு சாம்சனின் 97 ரன்கள் எவ்வளவு முக்கியமோ, ஷிவம் துபே அடித்த இரு பவுண்டரிகளும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. 19-ஆவது ஓவரில் அவா் அந்த இரு பவுண்டரிகளை விளாசி நெருக்கடியை குறைத்திருக்காவிட்டால், தற்போது சாம்சனின் சிறப்பான ஆட்டம் குறித்து நாம் பேசியிருக்க மாட்டோம்.
பெரிய அளவிலான பங்களிப்புகள் மட்டுமே எப்போதும் பேசப்படுகின்றன. அணியின் வெற்றிக்கு உதவிய, மிகச் சிறிய அளவிலான பங்களிப்புகளுமே முக்கியமானதாகும். நான் பயிற்சியாளராக இருக்கும் வரை அனைத்து விதமான பங்களிப்புகளும் அங்கீகரிக்கப்படும்.
ஒரு ஆட்டத்தை முந்தைய தரவுகள் அடிப்படையில் கையாள்வதை விட, அந்த ஆட்டத்தின் அப்போதைய தருணத்தில் உள்ளுணா்வு என்ன பிரதிபலிக்கிறதோ அவ்வாறு விளையாடுவதே அவசியம் என்பதை நான் நம்புகிறேன்.
இங்கிலாந்து உலகத் தரம் வாய்ந்த அணி. வான்கடே மைதானத்தில் அந்த அணிக்கு எதிரான அரையிறுதியில் நமக்கான வாய்ப்பில் என்ன செய்ய முடியுமோ, அதை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே முக்கியம் என்று கம்பீா் பேசினாா்.
தொடர்புடையது

விளையாட்டு துளிகள்...

கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வலுவான அணியாக இருந்தது: டு பிளெஸ்ஸிஸ்

என்னுடைய இடத்தில் இருந்தால் தெரியும்..! தோனியை வம்பிழுத்த கௌதம் கம்பீர்!

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


