

காங்கிரஸ் எம்பி சசி தரூரின் கருத்துக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
சமீப காலமாக இந்திய அணிகளின் தோல்விகளுக்கு கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
சசி தரூர் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டெஸ்ட்டில் ஒயிட் வாஷ், இலங்கையில் தொடரை இழந்ததும் என பல மோசமான சாதனைகளும் நடந்துள்ளன. இதனால், அவர் விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறார்.
நேற்றைய டி20 போட்டியின் போது கௌதம் கம்பீரைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் அவரது கடினமான வேலையைக் குறித்தும் அவரது மன தைரியம் குறித்தும் பாராட்டிப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இதற்குப் பதிலளித்த கௌதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பயிற்சியாளருக்கு எல்லையற்ற அதிகாரமா? கம்பீர் பதில்!
மிக்க நன்றி சசி தரூர்! சூழ்நிலை அமைதிக்குத் திரும்பியதும் பயிற்சியாளரின் ’எல்லையில்லா அதிகாரம்’ மீதான உண்மையும் தர்க்கமும் வெளிச்சத்துக்கு வரும்.
அதுவரை, யார் சிறந்தவர்கள் என்ற எனக்குள்ளான போட்டியைக் கண்டு நான் மகிழ்ந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் ரோஹித் சர்மாவை இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிய கம்பீர் ஷுப்மன் கில்லை நியமித்தார்.
இது ரோஹித் சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. அதற்கேற்றார்போல இந்தியாவும் நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.