

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் நேர் செட்களில் வென்று அசத்தினார்.
இத்துடன் தனது 399-ஆவது கிராண்ட்ஸ்லாம் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாமில் 399 வெற்றிகள்
விரைவில் 400 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ற முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டி, புதிய உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்.
செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (38 வயது) இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லி உடன் ஆஸி. ஓபனின் இரண்டாவது சுற்றில் மோதினார்.
இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என நேர் செட்களில் வென்று அசத்தினார்.
மூன்றாவது சுற்றில் வான் டி சாண்ட்சுல்ப் உடன் ஜோகோவிச் மோதவிருக்கிறார். அதில் வென்றால் 400 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரராக புதிய உலக சாதனையை நிகழ்த்துவார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகள்
1. நோவக் ஜோகோவிச் - 399
2. ரோஜர் ஃபெடரர் - 369
3. ரஃபேல் நடால் - 314
4. ஜிம்மி கானர் - 233
5. ஆண்ட்ரே அகாஸி - 224
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.