நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன்: பி. வி. சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி!

உலகின் 23-ஆம் நிலை வீராங்கனையிடம் பி. வி. சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி...

News image

PTI

Updated On :14 ஜனவரி 2026, 9:17 pm IST

இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான ஹெச்.எஸ். பிரணய், கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர். இரு முறை ஒலிம்பிக் பதக்க வீராங்கனையான பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

ஆடவர் ஒற்றையரில், பிரணய் 22-20, 21-18 என்ற வகையில் ஹாங்காங்கின் செயுக் யு லீயை வெளியேற்றினார். ஸ்ரீகாந்த் 15-21, 21-6, 21-19 என்ற கேம்களில், சக இந்தியரான தருண் மன்னெபள்ளியை சாய்த்தார்.

மகளிர் ஒற்றையரில் சிந்து 22-20, 12-21, 15-21 என்ற கேம்களில், வியத்நாமின் துய் லின் குயெனிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

கடந்த சில காலமாகவே தடுமாற்றத்தை சந்தித்து வரும் சிந்துவுக்கு, இந்தப் போட்டியிலும் அதே விதியே நேர்ந்தது. எனினும் மற்றொரு இந்தியரான மாளவிகா பன்சோத் 21-18, 21-19 என்ற நேர் கேம்களில், சீன தைபேவின் பாய் யு போவை தோற்கடிக்க, தன்வி சர்மா 20-22, 21-18, 13-21 என, சீனாவின் ஜி யி வாங்கிடம் வீழ்ந்தார்.

ஆடவர் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி "வாக் ஓவர்' பெற்று 2-ஆவது சுற்றுக்கு வந்தது.

மகளிர் இரட்டையரில், ருதுபர்னா பாண்டா/ஸ்வேதபர்னா பாண்டா ஜோடி 8-21, 18-21 என்ற வகையில், ஜப்பானின் நனாகோ ஹரா/ரிகோ கியோஸ் கூட்டணியிடம் தோற்றது. அதேபோல், அஸ்வினி பாட்/ஷிகா கெüதம் இணை 18-21, 16-21 என்ற வகையில், பிரான்ஸின் மார்காட் லாம்பெர்ட்/கேமிலி போக்னான்டே ஜோடியிடம் தோல்வியுற்றது. காயத்ரி ராவத்/மானசா ராவத் இணை 5-21, 8-21 என்ற கேம்களில், தென் கொரியாவின் ஹா நா பேக்/சோ ஹீ லீ ஜோடியிடம் வெற்றியை இழந்தது. கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி கூட்டணி 18-21, 6-21 என, மலேசியாவின் பியர்லி டேன்/தின்னா முரளிதரன் ஜோடியிடம் தோல்வி கண்டது.

கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 15-21, 14-21 என்ற நேர் கேம்களில், தாய்லாந்தின் பாகபோன் தீரரட்சகுல்/சப்சிரீ தெராடனாசாய் கூட்டணியிடம் தோல்வி கண்டது.

ஆசித் சூர்யா/அம்ருதா பிரமுதேஷ் இணை 15-21, 7-21 என, ஜப்பானின் யுய்சி ஷிமோகமி/சயாகா ஹோபரா ஜோடியிடம் தோற்றது.

ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி கூட்டணி 19-21, 14-21 என்ற வகையில், ஜெர்மனியின் மார்வின் செய்டெல்/துச் போங் குயென் ஜோடியிடம் தோற்றது.

Summary

India Open 2026 badminton: PV Sindhu suffers opening round exit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.