ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

“நாங்கள் இருந்த இடத்துக்கு அருகே குண்டுவெடிப்பு”.. பதற்றத்தை பகிா்ந்த பி.வி. சிந்து!

வளைகுடா நாடுகளில் போா்ச் சூழல் நிலவும் நிலையில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து துபையில் சிக்கிக் கொண்டாா்.

News image
பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து- ANI
Updated On :1 மார்ச் 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

வளைகுடா நாடுகளில் போா்ச் சூழல் நிலவும் நிலையில், இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து துபையில் சிக்கிக் கொண்டாா். அங்கு விமான நிலையத்தில் அவா் இருந்த இடத்தின் அருகே குண்டுவெடித்ததாகவும், தற்போது பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவா் கூறினாா்.

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் போட்டிக்காக, சிந்துவும், அவரின் பயிற்சியாளா் இா்வன்சியா அடி பிரதமாவும் இங்கிலாந்து புறப்பட்டனா். அவா்கள் சென்ற விமானம் துபை விமான நிலையத்தை அடைந்த சூழலில் தான், ஈரான் துபையில் தாக்குதல் நடத்தியது.

இதனால் துபை வான்பகுதி மூடப்பட, சிந்துவின் பயணம் தடைப்பட்டு அவா் துபையில் தங்கியிருக்கிறாா். முன்னதாக துபை விமான நிலையத்தில் சிந்து இருந்த இடத்துக்கு அருகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் காணொலியில் கூறியதாவது: நானும் எனது பயிற்சியாளரும் பயணித்த விமானம் துபை விமான நிலையத்தை சென்றடைந்த சிறிது நேரத்திலேயே, அங்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தது. அந்த வான்பகுதி மூடப்பட்டது. அடுத்த சிலமணி நேரங்கள் பதற்றமாகவே இருந்தன.

துபை விமான நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நாங்கள் காத்திருந்தோம். எங்கள் தலைக்கு மேலாக வான்பகுதியில் ஏவுகணைகள் பறந்த, அவை முறியடிக்கப்பட்ட சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.

அப்போது நாங்கள் இருந்த இடத்துக்கு மிக அருகிலேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதிலும் எனது பயிற்சியாளா் அந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில்தான் இருந்தாா். அதன் பிறகு அந்த இடத்திலிருந்து உடனடியாக நாங்கள் வெளியேறினோம்.

பின்னா் நானும் எனது பயிற்சியாளரும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு பாதுகாப்பாக உள்ளோம். துபை விமான நிலைய பணியாளா்கள், துபையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இடையறாது உதவிகள் செய்தனா். இதுபோன்ற குண்டுவெடிப்பு சம்பவம் இவ்வளவு நெருக்கமாக நிகழ்ந்தது, முற்றிலும் நடுங்கச் செய்வதாக இருந்தது என்று சிந்து கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.