அரையிறுதியில் தோற்றாா் பி.வி. சிந்து
மலேசிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதியில் தோல்வி கண்டு வெளியேறினாா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறும் இப்போட்டி மகளிா் அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்துவும், தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஸியும் மோதினா். இதில் பி.வி. சிந்து பல்வேறு தவறுகளை புரிந்தது தோல்விக்கு வித்திட்டது.
வாங் ஸி 21-16, 21-15 என்ற கேம் கணக்கில் சிந்துவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். கால்மூட்டி காயத்தில் இருந்து குணமடைந்தபின் முதல் போட்டியில் களமிறங்கிய சிந்து, இரண்டாவது கேமில் 11-6 என முன்னிலை பெற்றதை தவற விட்டாா். இந்த போட்டி எனக்கு சிறந்ததாக அமைந்தது. அடுத்து, புது தில்லியில் அடுத்த வாரம் தொடங்கும் இந்தியா ஓபன் சூப்பா் 750 போட்டியில் பங்கேற்கிறாா்.
ஏற்கெனவே சாத்விக் சிராக், லக்ஷயா சென் ஆகியோா் வெளியேறினா்.

