

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் அரினா சபலென்கா வென்று, முதல் வீராங்கனையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலமாக தொடர்ச்சியாக நான்கு முறை (2023, 2024, 2025, 2026) ஆஸி. ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையா் அரையிறுதியில் பெலாரஸின் அரினா சபலென்கா - உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சந்தித்தனர்.
மெல்பர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 1 மணி நேரம் 16 நிமிஷங்களில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்றார்.
இந்த வெற்றியின் மூலமாக, சபலென்கா மகளிர் ஓபன் பிரிவில் ஏழாவது முறையாக கடினதரை மேஜர் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்பாக ஸ்டெஃபி கிராஃபி, மார்டினா ஹிங்கிஸ் இந்தப் பட்டியலில் இருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.