இளம் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா!

ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் வென்ற சபலென்கா குறித்து...
Aryna Sabalenka of Belarus celebrates after defeating Iva Jovic of the U.S. in their quarterfinal match at the Australian Open tennis championship in Melbourne.
வெற்றிக் களிப்பில் சபலென்கா...படம்: ஏபி
Updated on
1 min read

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், அரினா சபலென்கா (27 வயது) காலிறுதியில் வென்றார்.

அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சபலென்கா உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.

18 வயதான அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் உடன் அரினா சபலென்கா மோதினார்.

இந்தப் போட்டியில் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்கா அபார வெற்றி பெற்றார்.

முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறிய, பெரிதும் எதிர்பார்த்த இளம் வீராங்கனை 3 கேமில் மட்டுமே வென்றார்.

மெல்பர்னில் 38 டிகிரி வெப்பத்தில் நடைபெற்ற ஒரு மணி நேரம் 29 நிமிஷங்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது.

முதல் வீராங்கனையாக அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.

Summary

Dominant Sabalenka brushes aside teenager Jovic to reach semis.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com