

யு19 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி சூப்பர் சிக்ஸின் தனது நான்காவது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
இந்தத் தொடரில் ஆஸி. தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று, ஒரு போட்டியிலும் தோல்வியுறாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது கவனிக்கத்தக்கது.
யு19 உலகக் கோப்பைப் போட்டிகள் நமீபியா, ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகின்றன.
தற்போது, இரண்டாம் கட்டமாக சூப்பர் சிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் 1, 2 பிரிவில் தலா 6 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், குரூப் 1 (ஏ,டி) பிரிவில் ஆஸ்திரேலிய அணி 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகவிருக்கின்றன. இந்திய அணி குரூப் 2 (பி,சி) பிரிவில் முதலிடம் வகிக்கிறது.
இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றால் இந்திய அணியும் அரையிறுதிக்குத் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.