
அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து..! டி20 உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!
டி20 உலகக் கோப்பையில் வரலாறு படைத்த இங்கிலாந்து அணி...

இங்கிலாந்து வீரர்கள். - படம்: ஏபி
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தேர்வாகி புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறி இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 164/9 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 166/8 ரன்கள் எடுத்து வென்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த வெற்றியுடன் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக அதிகபட்சமாக (5) அரையிறுதிக்கு முன்னேறிய அணியாக இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்
5 - இங்கிலாந்து (2016-26)*
4 - பாகிஸ்தான் (2007-12)
4 - இலங்கை (2009- 14)
Edge-of-the-seat drama! ð«¨
— Star Sports (@StarSportsIndia) February 24, 2026
England edged a thrilling contest to secure their second Super 8 win and a semi-final spot! ð
Up next ð ICC Menâs #T20WorldCup ð SUPER 8 | #SLvNZ | WED, FEB 25, 6 PM pic.twitter.com/StUHyXFcKc
England becomes the first team ever to do this in T20 World Cup history
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






