தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி: அபார வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி குறித்து...

England's Charlie Dean celebrates taking the wicket of Sri Lanka's Hansima Karunaratne during the ICC Women's T20 World Cup, Group 2 match at between England and Sri Lanka at Edgbaston, Birmingham, England, Friday, June 12, 2026. (Nigel French/PA via AP)

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து மகளிரணியினர். - படம்: ஏபி

Published On :

மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி-யின் 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 

மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி, வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து - இலங்கை மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 219/1 ரன்கள் குவித்தது. இதில் டானி வியாட்-ஹாட்ஜ் சதம் அடித்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஃப்ரேயா கெம்ப் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சதம் அடித்த டானி வியாட்-ஹாட்ஜ் ஆட்ட நாயகி விருது வென்று அசத்தினார். குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணி முதலிடம் வகிக்கிறது.

Summary

ICC Women's T20 World Cup 2026 first match England Women won by 87 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.