மகளிர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. குரூப் பிரிவில் 4 போட்டிகளில் தோல்வியே காணாமல் முன்னேறியுள்ளது.
கடைசியாக நேற்றிரவு லார்ட்ஸ் திடலில் நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 186/7 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக, டானி வியாட்-ஹாட்ஜ் 65 ரன்கள் குவித்தார். ஹீத்தர் நைட் குறைவான பந்துகளில் 43 ரன்கள் குவித்து அசத்தினார்.
மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஆஷ்மினி முனிஷீர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 20 ஓவர்களில் 148/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.
இந்த வெற்றியுடன் முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தப் பிரிவில் மே.இ.தீ. அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
நியூசிலாந்து, இலங்கை அணிகள் அடுத்த இடங்களில் தலா 4 புள்ளிகளுடன் இருக்கின்றன. மீதமிருக்கும் ஓரிடத்துக்கு இந்த மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
Summary
England storms into Women's T20 World Cup semifinals at sweltering Lord's
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!

பிரேசில் அபார வெற்றி: உலகக் கோப்பையில் முதல் அணியாக வெளியேறிய ஹைதி!

டி20 உலகக் கோப்பை: அறிமுக போட்டியில் சாதனை படைத்த இங்கிலாந்து வீராங்கனை!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி: அபார வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து!
விடியோக்கள்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP




