தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

டி20 உலகக் கோப்பை: அறிமுக போட்டியில் சாதனை படைத்த இங்கிலாந்து வீராங்கனை!

மகளிர் டி20 உலகக் கோப்பை அறிமுக போட்டியில் சாதனை படைத்த இங்கிலாந்து வீராங்கனை குறித்து...

England's Freya Kemp (R) celebrates taking the wicket of Sri Lanka's Harshitha Samarawickrama on the first day of the ICC Women's T20 cricket World Cup 2026 Group 2 stage cricket match between England and Sri Lanka at Edgbaston cricket ground in Birmingham, central England on June 12, 2026. (Photo by Darren Staples / AFP)

விக்கெட் வீழ்த்திய மகழ்ச்சியில் ஃப்ரேயா கெம்ப் (வலது) கீப்பருடன் கொண்டாட்டம். - படம்: ஏபி

Published On :

மகளிர் டி20 உலகக் கோப்பை அறிமுக போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஃப்ரேயா கெம்ப் சாதனை படைத்து கவனம் பெற்றுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இலங்கை பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 219/1 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய இலங்கை அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான ஃப்ரேயா கெம்ப் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதுவரை அற்றிமுக டி20 உலகக் கோப்பையில் நால்வர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்கள். அதில் ஒருவராக ஃப்ரேயா கெம்ப் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில், உலகக் கோப்பையில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஃப்ரேயா கெம்ப் மூன்றாவதாக இணைந்துள்ளார். முன்னதாக 2012ல் ஹோலி கோல்வினும் டேன்னி வியாட் (2010) நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்கள்.

மகளிர் டி20 அறிமுக உலகக் கோப்பையில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனைகள்

டானி வியாட்-ஹாட்ஜ் - 4/11 (2010, இங்கிலாந்து அணி)

ஃப்ரேயா கெம்ப் - 4/21 (2026, இங்கிலாந்து அணி)

டயானா டேவிட் - 4/27 (2010, இந்திய அணி)

Summary

Womens T20 World Cup: England player Freya Kemp sets a record in her debut match

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.