

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் வென்ற கார்லோஸ் அல்கராஸ் (22 வயது) இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலமாக அல்கராஸ் முதல்முறையாக ஆஸி. ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் நாட்டின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர்.
முதலிரண்டு செட்டை அல்கராஸ் வெல்ல, அடுத்த இரண்டு செட்டுகளை ஸ்வெரெவ் வென்று அசத்தினார்.
5 மணி நேரம் 27 நிமிஷங்கள் சென்ற இந்தப் போட்டியில் கடைசி செட்டினை அல்கராஸ் வென்று கீழே படுத்துவிட்டார்.
ஆஸி. ஓபன் அரையிறுதியில் மிக நீண்ட நேரம் நடந்த போட்டியாக இந்தப் போட்டி மாறியுள்ளது.
இந்தப் போட்டியில் அல்கராஸ் 6-4, 7-6(5), 6-7(3), 6-7(4), 7-5 என்ற செட்களில் வென்றார்.
இந்த வெற்றியின் மூலமாக நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை அல்கராஸ் படைத்துள்ளார்.
மெல்பர்னில் நடந்த போட்டிகளிலே இது மிகவும் நீண்ட நேரம் நடந்தவைகளில் மூன்றாவதாகவும் அரையிறுதியின் வரிசையில் முதலிடத்திலும் இடம்பெற்றுள்ளது.
மற்றுமொரு அரையிறுதியில் சின்னரும் ஜோகோவிச்சும் மோதுகிறார்கள். இதில் வெல்பவருடன் அல்கராஸ் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடுவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.