செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

2026-ல் முதல் தோல்வியைச் சந்தித்த அல்கராஸ்..! தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மெத்வதேவ்!

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்ற அல்கராஸ் குறித்து...

Daniil Medvedev, of Russia, left, is congratulated by Carlos Alcaraz, of Spain, after Medvedev defeated Alcaraz during a semifinal match at the BNP Paribas Open tennis tournament, Saturday, March 14, 2026, in Indian Wells, Calif. (AP Photo/Mark J. Terrill)

அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு டேனியல் மெத்வதேவுக்கு (இடது), வாழ்த்து கூறிய அல்கராஸ். - படம்: ஏபி

Published On :

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் தோல்வியுற்றார்.

இந்தப் போட்டியில் டேனியல் மெத்வதேவ் இடம் தோல்வியுற்றதன் மூலம், கார்லோஸ் அல்கராஸ் இந்தாண்டின் (2026) முதல் தோல்வியைச் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டித் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் டேனியல் மெத்வதேவ், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கார்லோஸ் அல்கராஸ் உடன் அரையிறுதியில் மோதினார்.

இந்தப் போட்டியில் 6-3, 7-6 (3) என்ற செட் கணக்கில் மெத்வதேவ் வென்று அசத்தினார். இந்தப் போட்டியில் வென்ற மெத்வதேவ் இறுதிப் போட்டியில் யானிக் சின்னருடன் மோதவிருக்கிறார்.

இந்தாண்டில் மட்டும் அல்கராஸ் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வென்றிருந்தார். இதில், கத்தார் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய போட்டிகளும் அடங்கும். தற்போது, இந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Summary

Medvedev hands Alcaraz his first loss of the year, heads to Indian Wells final against Sinner.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.