செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஒற்றுமைக் கோப்பை: அரையிறுதியில் ஜமைக்காவிடம் தோல்வியுற்ற இந்தியா!

ஒற்றுமைக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்ற இந்திய அணி குறித்து...

The Indian Men's Football Team

இந்திய ஆடவர் கால்பந்து அணியினர். - படம்: எக்ஸ் / இந்தியன் ஃபுட்பால்.

Published On :

ஒற்றுமைக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஜமைக்காவிடம் 0-2 என தோல்வியுற்றது.

ஃபிஃபா தரவரிசையில் இந்திய அணி 136ஆவது இடத்திலும் ஜமைக்கா 71ஆவது இடத்திலும் நைஜீரியா 26ஆவது இடத்திலும் ஜிம்பாப்வே 130ஆவது இடத்திலும் இருக்கின்றன. இந்த 4 அணிகள்தான் யுனைடி கப் எனப்படும் ஒற்றுமைக் கோப்பையில் விளையாடுகின்றன.

லண்டனில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஜமைக்காவும் மோதின. இந்தப் போட்டியில் 8, 78ஆவது நிமிஷத்தில் ஜமைக்கா அணியினர் கோல் அடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

முதல் அரையிறுதிப் போட்டியில் நைஜீரியா - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் 2-0 என வென்ற நைஜீர்யா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தற்போது, இறுதிப் போட்டியில் நைஜீரியாவும் ஜமைக்காவும் மோதுகின்றன. மூன்றாமிடத்துக்கான போட்டியில் இந்தியாவும் ஜிம்பாப்வேவும் மோதவிருக்கின்றன.

பிரிட்டன் மண்ணில் 2002க்குப் பிறகு முதல்முறையாக விளையாடிய இந்திய கால்பந்து அணி ஜமைக்காவின் அதிரடியால் வீழ்ந்தது.

Summary

India lose 0-2 to Jamaica in semfinal of Unity Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.