ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
அண்மையில் நிறைவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. அதேபோல, டி20 உலகக் கோப்பையை நடத்திய நாடு முதல் முறையாக கோப்பையை வென்றது என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தது.
இந்த நிலையில், ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐசிசி சார்பில் சிறந்த டி20 அணிகளுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் 275 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 262 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 258 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Indian team has retained the top spot in the ICC T20 team rankings.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



