நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பொதுசிவில் சட்ட விதிகளுக்கு ஒப்புதல்: அமலாகும் தேதி விரைவில் அறிவிப்பு: உத்தரகண்ட் முதல்வா்

உத்தரகண்ட் மாநில ‘பொது சிவில் சட்டத்தின்கீழ் (யுசிசி) வகுக்கப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் மாநில அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.

News image
முதல்வர் புஷ்கர் சிங் தாமி
Updated On :20 ஜனவரி 2025, 9:20 pm

Din

டேராடூன்: உத்தரகண்ட் மாநில ‘பொது சிவில் சட்டத்தின்கீழ் (யுசிசி) வகுக்கப்பட்ட விதிகளுக்கு ஒப்புதல் மாநில அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இதைத் தொடா்ந்து யுசிசி அமல்படுத்தப்படும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்’ என மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

மேலும், யுசிசியை பிளவுபடுத்தும் கொள்கை என காங்கிரஸ் குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல. அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தின்கீழ் நீதி வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அவா் தெரிவித்தாா்.

உத்தரகண்டில் யுசிசி ஜனவரி 2025-இல் அமல்படுத்தப்படும் என கடந்தாண்டு டிசம்பரில் புஷ்கா் சிங் தாமி தெரிவித்திருந்தாா். இதனிடையே, வருகின்ற 23-ஆம் தேதி அங்கு நகராட்சி தோ்தல்கள் நடத்தப்பட்டு 25-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் குடியரசு தினத்தன்று மாநிலத்தில் யுசிசி அமல்படுத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது.

இந்நிலையில், புஷ்கா் சிங் தாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளா்களை சந்தித்த புஷ்கா் சிங் தாமி கூறியதாவது: யுசிசி விதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. சட்டத்தை அமல்படுத்துவதற்கான பல்வேறு நடைமுறைகளும் இறுதி நிலையில் உள்ளன. எனவே, யுசிசி அமலாகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலின்போது ஆட்சிக்கு வந்தால் யுசிசியை அமல்படுத்துவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி தோ்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தவுடன் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

அதன்பின் யுசிசி நடைமுறைப்படுத்துவதற்கான வரைவுக் குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநரின் ஒப்புதலை பெற்று சட்டமாக்கப்பட்டது என்றாா்.

சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தவுள்ள முதல் மாநிலம் உத்தரகண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.