2025 எந்த ராசிக்கு அமோகமாக இருக்கும்.. பாபா வங்கா கணித்திருக்கிறாரா?

2025-ஆம் ஆண்டு எந்த ராசிக்கு அமோகமாக இருக்கும் என்று பாபா வங்கா கணித்திருக்கிறார் என தகவல்.
baba vanga
பாபா வங்கா
Published on
Updated on
1 min read

எதிர்காலத்தில் நிகழவிருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்துக் கொடுத்தவர் பாபா வங்கா. இவர் 2025ஆம் ஆண்டு எந்த ராசியினர் எல்லாம் கொடிகட்டிப் பறக்கப்போகிறார்கள் என்று கணித்துக் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் பாபா வங்கா, பல்கேரியாவைச் சேர்ந்தவர். மிக வயதான பாபா வங்கா, தனது 12 வயதில் பார்வையை இழந்தார். பார்வையை இழந்தது முதல் அவருக்கு எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை கணிக்கும் ஆற்றல் கிடைத்துள்ளது. அவர் தனது 85வது வயதில் காலமானதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவர் பல ஆண்டுகளுக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து எழுதி வைத்துள்ளார். அதில், இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல், டயானா மரணம், ரஷ்யா - உக்ரைன் போர் என பலவும் அடங்கும்.

அந்த வகையில், நாம் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி வரவேற்ற 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதையும் அவர் கணித்திருக்கிறார். ஆனால், உலகெங்கிலும் நடக்கும் பேரழிவுகள் பற்றியதாக அது உள்ளது. அதைத் தவிர்த்து, இந்த ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும் என்றும் அவர் கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதில் முதலிடத்தில் இருப்பது முதல் ராசியான மேஷ ராசிதான். உலகம் முழுவதும் இருக்கும் மேஷ ராசிக்காரர்கள், தங்களது வாழ்வில் என்ன கிடைக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ அது இந்த ஆண்டில் கிடைக்கும் என்று கூறியிருக்கிறாராம்.

அடுத்து, கடக ராசி.. மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இது இருக்கும் என்றும், கடந்த காலங்களில் அவர்கள் செய்த கடின உழைப்பின் பலனை இப்போது அனுபவிப்பார்கள் என்றும், நிதிப் பாதுகாப்பை அடைவார்கள் என்றும் கூறியிருக்கிறாராம்.

மூன்றாவதாக இருப்பது மிதுன ராசிக்காரர்கள்.. 2025ல் சிறப்பான மாற்றங்களையும் எதிர்பாராத வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம் என்றும், சவாலை எதிர்கொண்டு சாதனை படைக்க ஏற்ற ஆண்டாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் பாபா வங்கா இதனைக் கணித்துள்ளாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்த தகவல் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com