ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றார் நிதீஷ் குமார்!

மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசுக்கான ஆதரவை நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றுள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2025, 10:53 am

DIN

மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கான ஆதரவை நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் திரும்பப் பெற்றுள்ளது.

மணிப்பூரில் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. தற்போது மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் எம்எல்ஏ அப்துல் நசீர் மட்டுமே உள்ளார். அவர் இனி எதிர்க்கட்சியாக செயல்படுவார் என்று நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

60 இடங்களைக் கொண்ட மணிப்பூரில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை(37 எம்எல்ஏக்கள்) உள்ளது. ஒரு எம்எல்ஏவுக்கான ஆதரவு மட்டும் திரும்பப் பெறுவதால் பாஜக அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனினும் இது ஒரு முக்கிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2022 மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 6 தொகுதிகளை வென்றது. சில மாதங்களுக்குப் பிறகு அதில் 5 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு அணி மாறினர்.

மணிப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு 6 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள மேகாலயாவின் தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.

மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் இன்னும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 'இந்தியா கூட்டணி'யை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவர். ஆனால், கடந்த ஆண்டு அவர் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததற்கு நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆதரவும் முக்கிய காரணமாகும்.

தற்போது மணிப்பூரில் ஒரு எம்எல்ஏ மட்டும் இருக்கும்நிலையில் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக நிதீஷ் குமார் அறிவித்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், பாஜக கூட்டணிக்கு ஆதரவு தொடரும் என ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், இதனை அறிவித்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநில தலைவர் ஷேத்ரிமயும் பிரேன் சிங்கை பொறுப்பில் இருந்து அக்கட்சித் தலைமை நீக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.