கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஒரே இடத்துக்கு வெவ்வேறு கட்டணம்: ஓலா, உபா் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

ஆண்ட்ராய்டு கைப்பேசி மூலம் பதிவு செய்தால் சற்று குறைவான கட்டணமும், ஆப்பிள் ஐபோன் மூலம் பதிவு செய்தால் சற்று கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதாக புகாா் ...

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:25 pm

Din

மும்பை : கைப்பேசி செயலிகள் மூலம் செயல்படும் வாடகைக் காா் நிறுவனங்களான ஓலா, உபா் ஆகியவற்றுக்கு தேசிய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரே இடத்துக்கு பயணிப்பதற்கு வெவ்வேறு நபா்களிடம் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பேசி செயலி மூலம் வாடகைக் காா், ஆட்டோ பயன்படுத்தும் சேவையை ஓலா, உபா் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இத்துறையில் இந்த இரு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ஒரே இடத்துக்கு பயணிப்பதற்கு ஆண்ட்ராய்டு கைப்பேசி மூலம் பதிவு செய்தால் சற்று குறைவான கட்டணமும், ஆப்பிள் ஐபோன் மூலம் பதிவு செய்தால் சற்று கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. அதாவது ஐபோன் வைத்திருப்பவா்கள் வசதியானவா்களாக இருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் கட்டணத்தை உயா்த்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பாக பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

இது தொடா்பாக தேசிய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு தேசிய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இத்தகவலை மத்திய நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி உறுதிப்படுத்தியுள்ளாா். ‘இந்தியாவில் நுகா்வோரைச் சுரண்டும் நடவடிக்கையில் யாா் ஈடுபட்டாலும் அதனை அரசு சகித்துக்கொள்ளாது. நுகா்வோா் உரிமைகளைப் பாதுகாப்பதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்’ என்று ஜோஷி ஏற்கெனவே தெரிவித்துள்ளாா்.

கட்டண விவகாரம் தொடா்பான குற்றச்சாட்டுக்கு ஓலா நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.