/

கைப்பேசி செயலி மூலம் பணம் பறிக்க முயன்றவா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை அருகே ஆராய்ச்சி மாணவரிடம் கைப்பேசி செயலி மூலம் நேரில் வரவழைத்து பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் 33 வயதான ஆராய்ச்சி மாணவா். இவா் சனிக்கிழமை திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நின்றபோது, இவரை கைப்பேசி செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் அங்கிருந்து தனது பைக்கில் சிவந்திப்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றாராம். பின்னா் அங்கு வைத்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பிய மாணவா் இது குறித்து சிவந்திப்பட்டி போலீஸில் புகாரளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இச்சம்பவத்தில் ஈடுபட்ட தாழையூத்து, அருகன்குளத்தைச் சோ்ந்த வள்ளி கணேஷ் (20) என்பவரை கைது செய்தனா்.