
உத்தரப் பிரதேசத்தில் மொபைல் போன் வாங்கித் தராததால் சகோதரிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகரைச் சேர்ந்த சகோதரிகளான 17 வயதான கல்லூரி மாணவியும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவியும் மொபைல் போன் வாங்கித் தருமாறு அவர்களின் பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், மீண்டும் ஜனவரி 17 ஆம் தேதியிலும் அவர்களின் தாயாரிடம் மொபைல் போன் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால், அவர்களின் வறுமையைக் காரணம் காட்டிய மாணவிகளின் தாயார், ’’தந்தையால் பள்ளிச் செலவை மட்டுமே கவனிக்க முடியும்; மொபைல் போன் வாங்கித் தர இயலாது’’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனையடுத்து, மறுநாள் காலையில் மாணவிகள் இருவரும் படுக்கையறையில் உயிரிழந்திருப்பதைக் கண்டு, அவர்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் சுற்றுலா அட்டை இனி கிடையாது!
இருப்பினும், மாணவிகளின் தற்கொலை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், அவர்களின் உடலை தகனம் செய்து விட்டனர். இந்த நிலையில்தான், இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டதையடுத்து, வியாழக்கிழமையில் இந்தச் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.